இலங்கையருக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி – உங்கள் அனைவருக்கும் மேலதிக இன்டர்நெட்

இணைய பக்கேஜ்களுக்கு 10% போனஸினை வழங்குவதற்கு அனைத்து தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்களும் தீர்மானித்துள்ளனர்.

internet

2017 ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இணைய பக்கேஜ்கள் /அட்டைகளுக்கான தொலைத்தொடர்புகளுக்கான வரியானது குறைக்கப்பட்டமையினால் அனைத்து மொபைல் மற்றும் fixed line வாடிக்கையாளர்களுக்கு 10%போனஸ் Dataவினை அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களும் நல்லெண்ணத்துடன் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் இணைய பக்கேஜ்களுக்கான தொலைத்தொடர்புவரியானது அகற்றப்பட்டமையானது டிஜிட்டல் ஸ்ரீலங்காவை உருவாக்குவதற்கான ஒரு பாரிய முன்னோக்கிய நகர்வாக அமையும் என தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களால் ஒன்றிணைந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புகளுக்கான வரியானது நீக்கப்பட்டமையுடன் போனஸ் சலுகையானது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியினை பெற்றுள்ளதுடன் 2017 செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.