‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழை பெற்ற இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த அறிவிப்பை அடுத்து அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை மெர்சல் உடன் வருகிறோம். 2013-ல் `பாண்டியநாடு’ திரைப்படம் அஜித் சாரின் `ஆரம்பம்’ படத்துடன் வெளியிட்டோம்… ஆரம்பம் படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது… நன்றி”
என்று கூறியிருக்கிறார்.
வருகிற தீபாவளிக்கு விஜய் நடிப்பில் `மெர்சல்’ படமும், கவுதம் கார்த்திக் நடிப்பில் `ஹரஹர மகாதேவகி’, அர்ஜுன் இயக்கத்தில் `சொல்லிவிடவா’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.