விடுதலை புலிகளினால் தயாரிக்கப்பட்ட தமிழன் ரக கை குண்டுகள் மீட்பு

வவுனியாவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

bomb

வவுனியாவின் புறநகர் பகுதியொன்றிலுள்ள வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்யும் போது வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளளன.

யுத்தத்தின் போது புகைப்பட்ட 8 கைக் குண்டுகள் நேற்றிரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதல் முறையாக தனது காணியை சுத்தம் செய்வதற்காக டிராக்டர் பயன்படுத்தும் போது நேற்று மாலை ஒரு கை குண்டை அவதானித்துள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதன்பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இரும்பினால் மூடப்பட்ட நிலையில் 7 கைக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கிடைத்த 8 கை குண்டுகளில் 6 விடுதலை புலிகளினால் தயாரிக்கப்பட்ட தமிழன் ரக கை குண்டுகளாகும். ஏனைய இரண்டும் வெளிநாட்டு தயாரிப்புகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயன்பாட்டிற்காக விடுதலை புலிகளினால் புகைப்பட்டிக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கை குண்டுகளை அழிப்பதற்காக வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.