ஆத்திரமடையும் இலங்கை இரசிகர்களுக்கு மஹேல வேண்டுக்கோள்

இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தால் மைதானத்திலும் அதற்கு வெளியிலும் கொதித்தெழுந்த இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன பணிவான வேண்டுக்கோளை விடுத்துள்ளார்.

download (34)

இதுகுறித்து மஹேல தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “இது போன்ற தோல்வியால் வீரர்கள் விரக்தியில் இருப்பார்கள். அதை புரிந்து கொள்ளுங்கள், அழுத்ததில் இருக்கும் வீரர்களுக்கு இது போன்ற செயல்கள் உதவுவதில்லை, இதனால் இரசிகர்கள் அமைதியாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

தம்புளை மைதானத்தில் இந்த போட்டியில், இலங்கை அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த இலங்கை இரசிகர்கள் போட்டி முடிவடைந்ததன் பின்னர் தமது விரக்தியை வெளிப்படுத்தினர்.

இச்செயற்பாடு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னணி வீரர்களின் ஓய்வின் பின்னர் இதுவரை மீண்டெழாத இலங்கை கிரிக்கெட் அணி, சமீபகாலமாக மிக மோசமான தோல்விகளை தழுவிவருகின்றது. அத்தோடு உலக்கிண்ணம் வென்ற இலங்கை அணி தற்போது உலக்கிண்ண தொடருக்கான தகுதியைக்கூட எட்ட முயாலாது பரிதவிப்பது பரிதாபமே