சாக்லேட் பாய் மாதவனுக்கு ஒகே சொன்ன உலக அழகி..!

பாலிவுட் இயக்குனர் அனில் மஞ்சுரேகர் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரை வைத்து ஃபேனி கான் என்ற படத்தை எடுக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்குமாறு ராஜ்குமார் ராவ் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோரிடம் பேசப்பட்டது. ஆனால் அது சரிபட்டு வராததால் நடிகர் மாதவனை இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்க கேட்டுள்ளார்.

பாலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்-ரசிகைகள் வைத்துள்ள மாதவனுக்கு பாலிவுட்டிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. குரு மணிரத்னத்தின் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், மாதவன் முன்னரே நடித்துள்ளனர்.

ஆனால் அந்த படத்தில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக அவரது கணவர் அபிஷேக் பச்சன் நடித்தார். ஃபேனி கான் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்தார்.

பின்னர் மாமனார் அமிதாப் சொன்ன பிறகே சம்மதித்தார். இந்நிலையில் மாதவனுடன் நடிக்க உடனே ஓகே சொல்லியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.