நடிகர் தனுஷ் நடித்த VIP 2 படத்தில் சிகரட் புகைக்கும் காட்சிகளில் நடித்தமையால், யாழில் அவருக்கு எதிராக கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.
மாரி திரைப்படத்தில் புகைத்தல் காட்சிகளில் நடித்திருந்த நடிகர் தனுஷிற்கு எதிராக உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புகள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து, தனுஷ் தனது திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வைத்தியர் அன்புமணி ராம்தாஸ்க்கு கடிதம் மூலம் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் கடந்த நல்லூர் ஆலய திருவிழா காலத்தின் போது இளைஞர்கள் தனுஷின் இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிராக கையெழுத்திட்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இளைஞர் குழு ஒன்றே இந்த செயற்பாட்டை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.