2006 ல் இலங்கையில் ஒரு சிங்கள இராணுவ அதிகாரியால் வெளிஉலகிற்க்கு தெரிய வந்த உண்மை கதை.
இதுவரை புலிகளின் ஆண் தற்கொலைப் படை அணியினர் யாருமே உயிருடன் இராணுவத்தில் சிக்கியதில்லை.
ஒரேஒரு பெண்புலி மட்டுமே சிக்கினார்.
ஆனால் ஒரு தடவை புலிகள் வெற்றியின் உச்சத்தில் இருந்த பொழுது.
ஒரு ஆண் தற்கொலைப்படை புலி ஒருவர் முதன் முறையாக படுகாயத்துடன் நினைவிழந்த நிலையில் உயிருடன் சிக்கினாராம்.
அதை மிகப் பெரிய பெருமையாக கருதிய சிங்கள அதிகாரிகள்.
அவரது நினைவு திரும்பியதும் அவரை விசாரணை செய்வதற்க்காக கொழும்பு வைத்திய சாலையில் மிகுந்த வெறியுடன் அவரது கட்டிலைச்சுற்றி இரண்டு நாட்களாக விபரம் எடுக்க காத்திருந்தார்களாம்.
இரண்டுநாள் கழித்து நினைவு திரும்பிய அந்த புலிவீரன்.
மெதுவாக கட்டிலில் எழுந்து அமர்ந்தாராம்..!
சுற்றிலும் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு அரைவினாடி நேரத்தில்
யாரும் எதிர்பார்க்காத வகையில்.
தனது தலையை ஓங்கி கட்டிலின் விளிம்பில் அடித்து தலைசிதறி செத்துப்போனாராம்.
முதன் முறையாக சிங்கள வரலாற்றிலேயே இல்லாத வகையில் அனைத்து ராணுவ அதிகாரிகளும் தங்களது தொப்பிகளை கழட்டி சல்யூட் அடித்து எதிரிக்கு ராணுவ மரியாதை செய்தார்களாம்.
ஒரு போர்வீரன் என்பவன் எதிரியிடம் சிக்கினோம் என்று தெரிந்தவுடன், நாம் எதற்க்காக சிக்கினோம் என்றுகூட அறியாமல், தனது நோக்கம் சாவு ஒன்றே என தற்கொலை செய்து கொண்டதை மிகப் பெருமையாக சொல்லி
அரசாங்கத்திற்க்கு தெரியாமல் இராணுவமரியாதை செய்தார்களாம்.
இதை கூறியவர் செங்கலடி மேஜர் பெரெரா.
அவர் அந்த சமயத்தில் சாதாரண சிப்பாயாக அந்த புலி சிறைவைக்கப்பட்டிருந்த ஆஸ்பிட்டலில் பாதுகாப்பிற்க்கு நின்றிருந்தவர்.