முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் தொடர்பிலான தகவல்கள் இணையத்தில் வைரலாவது தற்போது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மஹிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ச அழகுராணிப் போட்டியொன்றில் பங்கேற்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
1973ம் ஆண்டில் சிராந்தி ராஜபக்ச உலக அழகு ராணிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.
லண்டனின் ரோயல் அர்பர்ட் ஹோலில் இந்த அழகுராணிப் போட்டி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிராந்தி ராஜபக்ச அழகுராணிப் போட்டியில் பங்கேற்ற காட்சி அடங்கிய காணொளியும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.