கல்கமுவ, கிரிபாவ ,சாலிய, அசோகபுர பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த மாணவியின் தாய் , முறுக்கு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அயல் வீடொன்றில் தொழில் புரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமை போல் , இன்று காலை தொழிலுக்கு சென்று மதியம் 12.00 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அவரின் மகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் , கட்டிலில் விழுந்து கிடந்தார்.
அதனை பார்த்து குறித்த பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து பிரதேசவாசிகள் கூடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் , பிரதேசவாசிகளால் சந்தேகநபர் ஒருவர் பிடிக்கப்பட்டு காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சந்தேகநபர் ,போதைப் பொருள் மற்றும் குடிபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவர் , சிறுமியின் வீட்டின் அருகில் இருந்து பேரூந்தொன்றில் ஏறி தம்புத்தேகம நோக்கி சென்றுள்ளார்.
இதன் போது , குறித்த நபர் மீது சந்தேகித்த பேரூந்தின் நடத்துடனர் , குறித்த நபர் தொடர்பில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் சிலருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , குறித்த பேரூந்தை பின் தொடர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் அவரை பிடித்து காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி 2019ம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர் கல்கமுக சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில் , கொலைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.