புகையிரதத்தின் ஊடாக பொதிகளை அனுப்பி வைக்கும் சேவைக்கான கட்டணங்கள் உயர்வு

புகையிரதத்தின் ஊடாக பொதிகளை அனுப்பி வைக்கும் சேவைக்கான கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ளது.

625.250.560.350.160.300.053.800.450.160.90

வர்த்தக நோக்கமற்ற மற்றும் நுகர்வு தேவைக்காக புகையிரதத்தின் ஊடாக பொதிகளை அனுப்பி வைக்கும் சேவைக்கான கட்டணங்களே இவ்வாறு உயர்த்தப்படவுள்ளன.

சிவில் விமான சேவை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொதிகள் சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.