யாழ்ப்பாணத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சித்தங்கேணி பகுதியிலுள்ள காணி ஒன்றிலுள்ள கிணற்றில் குறித்த பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் வீசிய துர்நாற்றத்தை அடுத்து அயலவர்களால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த காணிக்குள் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்நாற்றம் வீசுவதும் அயலவர்களால் கண்டறியப்பட்டது.
சடலமானது நீரில் நனைந்து ஊதி காணப்படுவதுடன் அதில் ஈக்கள் மொய்த்த வண்ணமும் காணப்படுகின்றன. சடலமானது இன்னமும் கிணற்றை விட்டு வெளியே எடுக்கப்பட்டு அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சடலம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சுளிபுரம் பகுதியில் வீட்டை விட்டு காணமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சடலமான பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் காணப்படுவதாகவும், கிணற்றுக்கு அண்மையில் இழுத்து சென்றது போன்ற அடையாளங்கள் தென்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.