பெண் ஒருவரை தேடிச் சென்ற நபர் உடலில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணுடன் நெருக்கமான பழக்கத்தை கொண்டிருந்த குறித்த நபர், அவரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு பெண் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த நபர் ஒருவர் உடலில் தீயிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தங்கொட்டுவ – யோகியான பிரதேசத்தின் ஆலை ஒன்றில் வேலை செய்த 40 வயதான வனசிங்க ஆராச்சிகே குணதிலக்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணமான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிந்தவர் யோகியான பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் சேவை செய்யும் லட்சுமி என்ற பெண்ணுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று மதியம் 2.40 மணியளவில் அவர் தனது இரகசிய மனைவி தொழில் செய்யும் இடத்திற்கு சென்று தன்னுடன் செல்வதற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு அந்த பெண் இணங்காமையினால் அந்த நபர் அவ்விடத்திலேயே உடலில் தீ வைத்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி மாலை 6 மணியளவில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.