மட்டக்களப்பு – ரிததென்னை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் விஜய் கே. நாகராஜ் என தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்று வேகம் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
நித்திரை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.