ல அஜித் நடிப்பில் உருவான விவேகம் படம் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாகியது.
சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுவதும் உள்ள 42 நாடுகளில் 3200க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியானது. தமிழகத்தில் மட்டும் 770 திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகியுள்ள விவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிப்பு
விவேகம் முதல் நாள்: ரூ.10 கோடி
விவேகம் 2ம் நாள்: ரூ. 15 கோடி
விவேகம் 3ம் நாள்: ரூ. 16.5 கோடி
விவேகம் 4ம் நாள்: ரூ. 18 கோடி
படம் வெளியானது முதல் வார இறுதி வரை மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.59.5 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பிரிமியர் ஷோ மட்டும் ரூ.1.34 கோடி வசூல் படைத்துள்ளது. இது அமெரிக்காவில் தல அஜித்தின் அதிகப்படியான பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் மட்டும் தல அஜித் ஓபனிங்கின் கிங் தான். ஏனென்றால் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.1.21 கோடி வசூல் படைத்துள்ளது.