பிரித்தானியாவைவிட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்சிற் வாக்கெடுப்பை தொடர்ந்து, பிரித்தானியாவைவிட்டு வெளியேறும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது.

download (47)

கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த 12 மாதங்களில் சுமார் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33 ஆயிரம் அதிகமாகும் என்பதுடன், கடந்த ஒரு தசாப்த காலத்தில் மிகப்பெரும் தொகையினர் வெளியேறியுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் பொருளாதார சிக்கல் என்பன இந்த வெளியேற்றத்திற்கு பிரதான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.