அஜித் மற்றும் சிவாவின் கடின உழைப்பின் மூலமாக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விவேகம். உலக அளவில் நேற்று வெளி வந்த இப்படத்தினால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த தல அஜித் பற்றி பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் ‘அப்பா வேடங்களில் நடிக்க வேண்டிய அஜித்தை எப்படி தான் ஹீரோவாக தமிழ் மக்கள் ஏற்று கொள்கிறார்கள் ‘ என விமர்சித்திருந்தார்.
இதை பார்த்த உடன் நம்ம தலதளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கமல்ரசித்தை காணாமல் போக வைத்து விட்டனர். அவர் ட்வீட் போட்டதிலிருந்து இந்த நேரம் வரை கிழித்து தொங்க விட்டு கொண்டிருக்கின்றனர்.
‘அப்படா இப்போவாச்சும் தலதளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்திர்களே அதுவே போதும்’ என பலரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.