யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியின் நடுவே மஞ்சள் கடவையில் கடவையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியோரின் மோட்டார்சைக்கில்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர் காவு வண்டியின் பயணத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கில்களை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிசார் அள்ளிச் சென்றனர்.
இவ்வாறு அள்ளிச் சென்ற மோட்டார் சைக்கில்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இந்த நடவடிக்கையின் போது 8 மோட்டார் சைக்கிள்கள் பொலிசார் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்டவேளையில் மூவர் சம்பவ இடத்திற்கு வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பொலிசார் அவர்களிற்கான நீதிமன்ற நடவடிக்கை பத்திரங்களை வழங்கினர்.
ஏனைய 5 மோட்டார் சைக்கில்களையும் பொலிஸ் நிலையம் ஏற்றிச் சென்றனர்.
பொலிசாரால் ஏற்றிச்செல்லப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்களும் நீதிமன்றில் ஆயர் செய்யப்படவுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.