உண்ணாவிரதம் இருக்கும் முருகன் உடல்நிலை மோசமடைந்துள்ளது? மனைவி நளினி சந்தித்து பேசினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

images (32)

இதனிடையே, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசினார்.

தான் சிறையிலேயே ஜீவசமாதி அடையப் போவதாக நளினியிடம் முருகன் தெரிவித்தார்.

இதன்படி, ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முருகன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். தண்ணீர் மட்டுமே அருந்துகிறார்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக, முருகன் உடல்நிலை மோசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து முருகனை சந்திக்க அவரது வழக்கறிஞர் புகழேந்தி சிறைக்குள் சென்றுள்ளார்.

அதையடுத்து சிறைக்குள் அம்புலன்ஸ் சென்றதால் சிறை பரபரப்பு ஏற்பட்டது.

மதியம் 1 மணியளவில் ஏடிஜிபி சைலேந்திர பாபு சிறைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் முருகன் உடல் நலம் குறித்து அவரது அனுதாபிகள் கவலையடைந்துள்ளனர்.