சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி

சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ரெடியாகி அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இவற்றில் முதல் படமாக சர்வர் சுந்தரம் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சந்தானம்.

santa

எம்.ராஜேஷ் இதுவரை இயக்கிய ஆறு படங்களில் ஐந்து படங்களில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்தானம். எம்.ராஜேஷின் ஆரம்பகாலப் படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய மூன்று படங்களில் ஏறக்குறைய இன்னொரு ஹீரோவாகவே நடித்திருந்தார் சந்தானம்.

இந்நிலையில்தான், எம்.ராஜேஷ் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்ததன் மூலம் சந்தானத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது தேனாண்டாள் பிலிம்ஸ்தான். இந்தப் படத்தில் சந்தானத்தின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.