இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடும் இந்தியாவின் இராஜதந்திரமும்

அமெரிக்கா இந்தியா மற்றும் ஈரான் உள்ளிட்ட 17 நாடுகள் பங்கு பற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு எதிர் வரும் வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

400px-Indian_ocean_sea_line

 

எதிர் வரும் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந் மாநாடு அலரிமாளிகையில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் பாபு, மற்றும் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெயசங்கர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் எதிர் வரும் புதன் கிழமை இலங்கைக்கு வரவுள்ளனர்.

சீனா தனது பட்டுப்பாதை திட்டத்தை கடல் மற்றும் நிலம் மார்க்கமாக நட்பு நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் மிக வேகமாக தனத இழக்கை அடைந்து வருவதால் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு சவாலாகவுள்ளது இதனால் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா முன்பை விட தற்போது கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் ஒன்றே ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் என நன்கு அறிந்த இந்தியா இங்குள்ள நிலைமைகளை சரி செய்வதற்கும் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொளவதற்குமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இச் சூழ் நிலையில் இலங்கையில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டை தனக்கு சார்பாக்கி கொள்ளும் முழு மூச்சுடனே இரண்டு மத்திய அமைச்சர்கள் உட்பட உயர் மட்ட குழுவை டெல்லி இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளது.

பல முக்கிய நாடுகளின் பிரமுகர்களின் பங்களிப்புடன் கொழும்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கடல் பாதுகாப்பு சார்ந்த பல விடயங்கள் குறித்து பொது இணக்கப்பாடுகள் எடுக்கப்படவுள்ளன.