வங்கியொன்றில் இளைஞரின் செயற்பாடு! இலங்கையில் நடந்த விநோதம்

திருகோணமலையில் இளைஞர் ஒருவரின் நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

baank

சட்டை, காற்சட்டை ஒன்றும் இன்றி இளைஞர் ஒருவர் வங்கிக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துவாய் ஒன்றை மாத்திரம் அணிந்த நிலையில் இந்த இளைஞர் வங்கிக்கு சென்றுள்ளார்.

திருகோணமலை தனியார் வங்கி ஒன்றிற்கே இந்த இளைஞர் இவ்வாறு சென்றுள்ளார்.

அங்கிருந்த அனைவரும் இந்த சம்பவத்தை விநோதமாக பார்வையிட்டதுடன், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வார இறுதி விடுமுறை என்பதனால் அனைத்து ஆடைகளும் கழுவியிருப்பார்கள். அணிவதற்கு ஒன்றும் இல்லாமல் இந்த இளைஞர் இவ்வாறு சென்றிருக்கலாம் என பலர் பேஸ்புக் பக்கத்தில் நகைச்சுவையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.