இன்றைய ராசிபலன் (27/08/2017)

  • மேஷம்

    மேஷம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி யில் நல்ல செய்தி உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எதிர்பாராத  நன்மைகள் உண்டாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். நாடி  வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்:  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச்  சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் செழிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கடகம்

    கடகம்:  நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள்  வந்து போகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்:  குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துப்  பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உற்சாகமான நாள்.

  • கன்னி

    கன்னி:  குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விலை உயர்ந்த  பொருட்கள் வாங்குவீர்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.

  • துலாம்

    துலாம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண் டாம். கணவன்- மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப்  பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். போராட்டமான  நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தின ருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.  உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோ ரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். பெருந் தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

  • மகரம்

    மகரம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில்  அந்தஸ்து உயரும். விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். சாதிக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டா கும். புதிய எண்ணங்கள் தோன்றும். வராது என்றிருந்த பணம் வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியா பாரத்தில் பழைய  பாக்கிகள் வசூலாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மீனம்

    மீனம்:  சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பிள்ளை களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங் கள். உங்களை நீங்களே குறைத்து  மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.