பலத்த பாதுகாப்புடன் யாழ். மண்ணிற்கு செல்லும் தேரர் குழு!

யாழ். மாவட்டத்திற்கு வரக்காகொட ஞானரதன மஹா தேரர் உட்பட, அஸ்கிரிய தேரர்கள் உள்ளிட்ட குழு எதிர்வரும் 28ஆம் திகதி விஷேட பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

images19

மேலும், யாழ். செல்லும் குறித்த தேரர் குழு அங்கு உலக இளம் பௌத்த இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி சர்மத தலைவர்களுடன் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றினையும் யாழ். செல்லும் தேரர் குமு முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, குறித்த தேரர் குழுவினருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.