இன்று இடம்பெறவுள்ள இந்திய அணியுடனான போட்டியில் திட்டமிட்டவகையில் செயற்பட்டு வெற்றிபெருவதாக இன்றைய போட்டிக்கன இலங்கை அணித் தலைவர் சாமர கபுகெதர தெரிவித்துள்ளார்.
பல்லேகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த போட்டியில் தாமதமாக களத்தடுப்பில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையின் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளுக்கான அணித் தலைவருக்கு இரண்டு போட்டித் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சாமர கபுகெதர அணித் தலைராக செயற்படவுள்ளார்.
இதேவேளை, உலக பதினொருவர் அணிக்கெதிரான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை என்பன இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக, உலக பதினொருவர் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட இருவருக்கு இருபது கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் உலக பதினொருவர் அணிக்கெதிராக விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அணித் தலைவராக, சர்பிராஸ் அஹமது செயற்படவுள்ளார். இவர் தவிர பகர் சமான், அஹமது சேஷாத், பாபர் அசாம், சோயிப் மலிக், உமர் அமீன், இமாத் வாசிம், ஷதாப் கான், மொகமட் நவாஸ், பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, அமிர் யாமின், மொகமட் அமிர், ருமான் ரயீஸ், உஸ்மான் கான், சொஹைல் கான் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.