புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வடகொரியா!

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான முறுகல் அதிகரித்துள்ள நிலையில், புதிய ஆயுதங்களை தயாரிப்பதற்கு வடகொரியா ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

download (54)

இதன்படி, திட நிலை எரிபொருளை பயன்படுத்தி இயங்கக்கூடிய ரொக்கெட்டுகளை தயாரிப்பதற்கு வடகொரியா ஜனாதிபதி “கிம் ஜோங் உன்” உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு, வடகொரியா அண்மை காலமாக சவால் விடுத்து வருகின்றது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. இந்நிலையில், திட நிலை எரிபொருளை பயன்படுத்தி இயங்கக்கூடிய ரொக்கெட்டுகளை தயாரிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய ஏவுகணைகள் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் டி.சி. உட்பட அமெரிக்க கண்டத்தில் எந்த இலக்கையும் அடையக்கூடிய வகையில் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில புதிய வகையான பல்வேறு ஆயுதங்களைப தயாரிக்கவும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.