சட்டவிரோத தொழிலாளர்களை நியமித்த காரணத்தினால் பிரித்தானியாவில் உள்ள PFC என்ற உணவகம் மூடப்படும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்துறை அலுவலகத்தால் பெறப்பட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில், பிரித்தானியாவின் Moulsham தெருவில் உள்ள PFC உணவகம் கடந்த ஜுன் மாதம் 2ஆம் பொலிஸ் மற்றும் குடிவரவு அதிகாரிகளினால் பார்வையிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பணி புரிய உரிமம் இல்லாத இரண்டு இலங்கையர்களை அங்கு அதிகாரிகள் சந்தித்ததாக கூறப்படுகின்றது.
அந்த உணவகத்தில் இந்த இரண்டு பணியாளர்களும் தங்கும் அறையில் இருந்து மூன்று இரட்டை தட்டு கட்டில்களை Essex பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இந்த நிலையல் அவர்களில் பெண் ஒருவர் அங்கு சம்பளம் பெற்று கொள்ளாமல் உரிமையாளருக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், அவர் பல வாரங்கள் அங்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றவர் அங்கு ஒரு வருடம் வேலை செய்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாளத்திற்கு 7.50 பவுண்ட் என்ற கணக்கில் அவருக்கு சம்பளம் வழங்கப்படுவதாகவும், குறிப்பிடப்படுகின்றது.
அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த உணவகத்திற்கு உரிமம் பெற்ற உரிமையாளர் ராஜ பலால் ஹுசைன், அவரது தொழிலாளர்களின் உரிமம் தொடர்பில் எந்த விடயத்தையும் கருத்திற் கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது வரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில், இரண்டு நபர்கள் அந்த இடத்தில் சட்ட விரோதமாக வேலை செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி காலை 11 மணியளவில் வழக்கு விசாரணையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.