மின் உற்பத்தி தொடர்பில் இலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

இலங்கையில் நிலவிய கடும் வறட்சியின் பின்னர் தற்போது மழையுடன் காலநிலை நிலவி வருகிறது.

EB

இந்நிலையில் மின் உற்பத்தி இடம்பெறும் நீரேந்து பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்திருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறா எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் நீர் மூலமான மின் உற்பத்தி 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மின் உற்பத்தி தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படவில்லை என்றும் மின்சார விநியோகத்தை கட்டுப்படுத்த தேவையும் இல்லை என்று அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய கடும் வறட்சி காரணமாக மின்சார விநியோகத்தை சீராக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக குறிப்பிட்ட மணிநேரம் மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அமைச்சு அறிவித்திருந்தது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையால் நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் நிறைந்து வருகிறது.

இதன்காரணமாக நீரின்றி பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக மனிதர் மட்டுமன்றி விலங்கினங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.