அதிரடி ஆட்டகாரரான ஹைடனை தனது கனவு அணியின் ஓப்பனிங் துடுப்பாட்ட வீரராக சங்ககாரா தெரிவு செய்துள்ளார்.
ராகுல் டிராவிட் (இந்தியா)
நின்று நிதானமாக விளையாடக்கூடிய ராகுல் டிராவிட் இன்னொரு ஓப்பனிங் துடுப்பாட்ட வீரராக கனவு அணியில் உள்ளார்.
பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பர் 1 வீரரான இவர் டெஸ்ட் போட்டியில் 400 ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் ஆவார்.
ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா)
அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த வீரரான பாண்டிங்கை நான்காவது வீரராக சங்ககாரா தெரிவு செய்துள்ளார்.
அரவிந்த டி சில்வா (இலங்கை)
முன்னாள் இலங்கை தலைவரான இவர் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், பீல்டராகவும் திகழ்ந்தவர்.
ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா)
உலகின் சிறந்த ஆல்ரவுண்டரான முன்னாள் வீரர் காலிஸ் அதிக காலம் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ளார்.
ஆடம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா)
அதிரடி ஆட்டகாரரும், சிறந்த விக்கெட் கீப்பருமான கில்கிறிஸ்ட்டுக்கும் கனவு அணியில் இடம் கிடைத்துள்ளது.
ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா)
விளையாடிய காலத்தில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சுழற்பந்து வீச்சாளர் வார்னேவும் கனவு அணியில் உள்ளார்.
முத்தையா முரளிதரன் (இலங்கை)
800 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஜாம்பவான் முரளிதரன், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் ஆவார்.
சமீந்தா வாஸ் (இலங்கை)
முன்னாள் வீரரான வாஸ் அணியின் கடிமான நேரத்தில் விக்கெட்களை கைப்பற்றுவதில் வல்லவராக திகழ்ந்தவர்.
வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)
தனது யார்க்கர் வேகப்பந்து வீச்சின் மூலம் எதிரணியை நிலை குலைய வைக்கும் வாசிம் அக்ரமுக்கும் சங்ககாராவின் கனவு அணியில் இடம் கிடைத்துள்ளது.