வான் ஒன்றில் ஏற்றி வரப்பட்ட முதியவர் ஒருவர் அவிசாவளை பேருந்து நிலையத்தில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
எகலியகொடை பரக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான டி.ஜீ.நெல்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு வயது வந்த மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன், இரண்டு மகள்மார்.
உடலில் பலம் இருந்த காலத்தில் இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் தொழிலை செய்து வந்தேன். அந்த தொழிலை செய்தே பிள்ளைகளை வளர்த்தேன்.
என்னிடம் இருந்த அனைத்தையும் பிள்ளைகளுக்கு கொடுத்தேன். தற்போது பிள்ளைகள் என்னை கவனிக்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என முதியவர் கூறியுள்ளார்.