சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வீசா அனுமதியின்றி தங்கியிருந்த இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சீனப் பெண் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.