இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் தீர்மானமிக்க மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 218 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இரு விக்கெட்டுக்களை 28 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து தடுமாறியது.
ஆரம்ப வீரராக களமிறங்கிய டிக்வெல்ல 13 ஓட்டங்களுடனும், அதன்பின்னர் களமிறங்கிய குசால் மென்டீஸ் ஒரு ஓட்டத்துடன் களத்தினை விட்டு வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த சந்திமால் மற்றும் லஹிரு திரிமான ஜோடி நிதமனாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.இந்திய அணி வீரரான பாண்டியா வீசிய 26 ஆவது ஓவரில் 36 ஓட்டங்கள் பெற்றிருந்த சந்திமால் பும்ராவிடம் பிடிகொடுத்து ஆடுக்களத்தினை விட்டு வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரிதாக தனது ஆட்டத்தினை வெளிப்படுத்தாமையால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 217 ஓட்டங்களை பெற்றனர். இலங்கை அணி சார்பாக நிதானமாக துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமான 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.