இன்றைய ராசிபலன் 28.08.2017

மேஷம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரி கள் உதவுவார்கள். மாலை 4.06 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அமோகமான நாள்.

மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபா ரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். கனவு நனவாகும் நாள்.

கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னைகள் தீரும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

சிம்மம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனு பவம் உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதிக்கும் நாள்.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புது எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர் கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: மாலை 4.06 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். பண விஷயத்தில் கறாராக இருங் கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தின ருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். மற்றவர் களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிடவேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத் தூக்கும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். மாலை 4.06 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். இனிமையான நாள்.

மகரம்: எதிலும் வெற்றி பெறு வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படு வீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்: மாலை 4.06 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. வியாபார த்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.