ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் முக்கிய அரசியல்வாதிகள் ஆறு பேருக்கு எதிராகவே அவர்களின் அங்கத்துவத்தை ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டே கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படுதல் மற்றும் கட்சியின் தீர்மானங்களை பகிரங்கமாக விமர்சித்தல் போன்ற செயற்பாடுளில் ஈடுபடுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பவித்திரா வன்னியாரச்சி, ரோஹித அபேகுணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, சனத் நிஷாந்த மற்றும் லொகான் ரத்வத்தை ஆகியோரே இவ்வாறு சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ளனர்.
அவ்வாறு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படும் பட்சத்தில் குறித்த ஆறு பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.