யாழில் இன்று நடந்த கொடூரம்!!சாப்பாட்டுக்குள் இருந்த புழுவை சாப்பிடாததால் தர்ம அடி!!
யாழ்ப்பாணம் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள விஷ்ணு பவான் உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டுக்குள் 2cm நீளமான புழு இருந்ததை அவதானித்த ஒருவர் அது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் சுட்டிக்காட்டி வினவியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளரும் ஊழியர்களுமாக சேர்ந்து குறித்த நபரை கடையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றியதோடு ஹெல்மற் மற்றும் கொட்டான் தடிகளாலும் தாக்கியுள்ளனர்.
குறித்த கடையில் அடிக்கடி இவ்வாறு சுகாதார சீர்கேடுகள் நடைபெறுகின்றதெனவும் இது குறித்து யாழ் சுகாதார பணிப்பாளரோ அவரது பணியாளர்களோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்று 27 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவம் யாழ் நகரப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக லவ்சிறி.கொம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முறைகேடான முறையில் உணவு தயாரிப்பு நடைபெறுகின்றதா என அவதானித்து நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் இது குறித்து கவனம் செலுத்தாது அலட்சையாக இருப்பதனால் இந்த உணவகத்தில் சாப்பிடும் அனைவரும் கொடிய வயிற்று தொற்று நோய்களுக்கு (Intestinal diseases) ஆளாகுவார்களென மக்கள் பீதியடைந்துள்ளனர்.