முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த அதிகரிப்பை காண முடிந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த வருடம் வாகன விபத்துக்களினால் 2824 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1719 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த 6 மாத காலப்பகுதியில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1561 ஆகும். சிறு காயங்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1059 ஆகும்.
கடந்த வருடம் முச்சக்கர வண்டிகளினால் 372 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களுக்குள் அதன் எண்ணிக்கை 186ஆக பதிவாகியுள்ளதென பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.