உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்க முயற்சி:விமல் வீரவங்ச

புதிய நீதியமைச்சர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தங்களை கொடுத்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்து கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 10 தலைவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கேகாலை அஞ்சல் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தங்களை கொடுத்து அரசாங்கத்தின் அமைச்சர்களது வழக்குகளை கீழடிப்பு செய்வதற்காகவே தலதா அத்துகோரளவை நீதியமைச்சராக நியமித்துள்ளனர்.

மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அழுத்தம் கொடுத்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்து கூட்டு எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியின் 10 தலைவர்களை சிறையில் அடைக்கும் பொறுப்பை நீதியமைச்சர் ஏற்றுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டள்ளார்.