ஆஸ்திரியா நாட்டில் ஷில்லெட்ரல் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையில் மலையேறும் பயிற்சியில் பல குழு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெர்மனி மலையேறும் வீரர் ஒருவர் கயிற்றில் இருந்து தவறி விழுந்தார்.
அதைத்தொடர்ந்து அவருடன் அதே கயிற்றில் ஏறிய மற்ற 4 வீரர்களும் 650 அடி பள்ளத்தில் தவறி விழுந்தனர். அதில் 5 பேரும் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்குட்பட்டவர்கள்.
இதேபோன்று இத்தாலி ஆல்ப்ஸ் மலையில் டிரெண்டோ அருகே நடந்த மற்றொரு விபத்தில் மலையேறும் வீரர்கள் 3 பேர் தவறி விழுந்து பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் இத்தாலியை சேர்ந்தவர்கள்.