எடையை குறைக்க உதவும் கற்றாழை – எலுமிச்சை ஜூஸ்

தேவையான பொருட்கள் :

கற்றாழை ஜெல் – 100 கிராம்
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை :

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மிக்சியில் வடிகட்டிய ஜூஸை ஊற்றி அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்.

அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.

சூப்பரான கற்றாழை – எலுமிச்சை ஜூஸ் ரெடி!!!