மீண்டும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலை பின்பற்றி அதில் வெற்றி பெற்று வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி. தனது ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது, `அநீதிக்கதைகள்’, `96′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, `சீதக்காதி’, `சயீ ரா நரசிம்ம ரெட்டி’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதில் `ஜுங்கா’ படத்தை விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கவிருக்கிறார். `விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக வனமகன் புகழ் சாயிஷா நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், தொடர்ந்து ஒரு மாதம் பாரீஸில் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் `புரியாத புதிர்’ வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து `கருப்பன்’ படமும் செப்டம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.