விஷால் பாடலை வெளியிடும் ஆர்யா

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக ‘தலைவன் வருகிறான்’ என்ற விஷால் பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை நடிகர் ஆர்யா இன்று வெளியிட இருக்கிறார்.

‘தலைவன் வருகிறான்’ என்ற பாடலின் வரிகளை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். பத்திரிக்கையாளர் ராஜிவ் காந்தி இயக்கியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ளார். குணா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இப்பாடலை இன்று இரவு 10 மணியளவில் ஆர்யா வெளியிட இருக்கிறார்.

சமீபத்தில் ராஜீவ் காந்தி இயக்கிய ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணப்படும் சினிமா மற்றும் பத்திரிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.