முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் அமைந்திருக்கும் இராணுவ நீர்மூழ்கி கப்பல் காட்சி வளாகத்தில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான நீர்மூழ்கி கப்பல்களை அதிகமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
யுத்தம் முடிந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மற்றும் விட்டுச் சென்ற தொழில்நுட்பங்களை இன்றும் மக்கள் பார்த்து வியக்கின்றனர்.
அந்தவகையில், விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான நீர்மூழ்கி கப்பல் மற்றும் இயந்திர தொழில்நுட்பங்களை பொதுமக்கள் பார்வையிட்டு, வியப்படைந்து வருகின்றனர்.