பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

Ranil

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகளின் ஊடாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

பிணை முறி மோசடிகள் இடம்பெற்ற போது மத்திய வங்கி பிரதமரின் கீழ் இயங்கி வந்தது.

எனவே இந்த மோசடிகள் பிரதமருக்கு தெரிந்தே இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது எவராலும் ஊகிக்கக் கூடியதொன்றாகும்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநயாக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதனைப் போன்றே, பிரதமருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என ஜனக வக்கும்புரே குறிப்பிட்டுள்ளார்.