கல்கமுவ அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான மாணவியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்ஷன சமன் குமாரவின் தாயார் தன்னுடைய மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் பரவாயில்லை என கல்கமுவ பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தான் எழுதிய கடிதத்தை கொலை செய்யப்பட்டுள்ள மாணவியின் பூதவுடலுக்கு முன்னால் வாசிக்குமாறு கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.
அக் கடிதத்தில் இத்தகைய குற்றத்தை செய்த குற்றவாளியின் தாயாக இருப்பதால் தான் வெக்கப்படுவதாகவும் அதனால் ஏற்பட்ட மன வேதனையை தன்னால் சொல்ல முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தன்னுடைய மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் தனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்துள்ள மாணவியின் ஆத்ம சாந்திக்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் எழுதியள்ளார்.
உயிரிழந்த மாணவி 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என குறிப்பிடத்தக்கது
இக் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.