நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் திரைக்குவந்து வெற்றிநடை போடும் ‘விவேகம்’ வசூலில் 100 கோடியையும் தாண்டியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி வெளியாகிய இந்த திரைப்படம் முதல்நாளில் சென்னையில் மாத்திரம் 1.21 கோடியை வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் 1.51 கோடி, 1.52 கோடி, 1.43 கோடி என ஐந்து நாட்களில் 6.30 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது.
இவ்வாறிருக்க வெளிநாடுகளில் முதல்நான்கு நாட்களில் 37 கோடியையும் தமிழகத்தில் 49 கோடி ரூபாயும் இந்தியாவில் 70 கோடி ரூபாயும் என வசூலில் 100 கோடியையும் தாண்டி நகர்கின்றது.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இது இவருடைய முதல் தமிழ் தரைப்படம் ஆகும். சத்யஜோமி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலும் பரதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும் தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.</p>