விஜய்சேதுபதி படத்திற்கும் தொடரும் அஜித் பட சென்டிமென்ட்!

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை சென்டிமென்ட்டை துவங்கி வைத்தார்கள். அப்படத்தின் டைட்டில் அறிவிப்பு, இசை வெளியீடு, டீஸர் ரிலீஸ், திரைப்படம் வெளியீடு என அனைத்தையும் வியாழக்கிழமையிலேயே நடத்தினர். அதேபோல், இந்த கூட்டணி மீண்டும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் இது தொடர்ந்தது. அஜித்தின் லேட்டஸ்ட் ரிலீஸான ‘விவேகம்’ படத்திலும் இந்த சென்டிமென்ட் கையாளப்பட்டது. இப்போது இதே சென்டிமென்ட்டை விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’ படத்திற்கும் துவங்கியுள்ளனர். இப்படத்தை ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எனவேதான், இப்படத்திற்கும் சாய் பாபாவின் புனித நாளான வியாழக்கிழமையை ரிலீஸிற்காக தேர்ந்தெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
cine-karuppan
ஏ.எம்.ரத்னத்தின் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் உருவாகிவரும் ‘கருப்பன்’ படத்தின் இசை வெளியீட்டை நாளை (ஆகஸ்ட் 31, வியாழக்கிழமை) நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.