பெண் அதிபருக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய மறக்க முடியாத தண்டனை

பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவியை சேர்த்துக்கொள்வதற்காக 25,000 ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்ட முன்னாள் அதிபருக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நகரை சேர்ந்த பிரசித்த பாடசாலையின் முன்னாள் அதிபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கின் தீர்ப்பை கிஹான் குலசிங்க, இன்று வழங்கினார்.

2009ஆம் ஆண்டு குறித்த முன்னாள் அதிபர் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டதாக கையூட்டு மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்ட 02 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இவ்வாறு தண்டனை பெற்றுள்ள அதிபர் பெண் என்ப