காதலுக்காக களமிறங்கிய ஜெயம் ரவி

சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும், காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததே இல்லை. அந்த வகையில் ஒரு முழு காதல் படமாக உருவாகியிருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.

இப்படத்தின் டீசரை இன்று மதியம் 2 மணியளவில் வெளியாக இருக்கிறது. அந்த டீசரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயம் ரவி வெளியிடுகிறார்.

இப்படத்தில் மலையாளத்தில் வளர்ந்து நாயகர்களுள் ஒருவரான டோவினோ தாமஸ் நாயகனாகவும், பியா பாஜ்பாய் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ளார்.

‘அபியும் அனுவும்’ ஒரு புதுமையான, சொல்லப்படாத காதல் கதையாக அமையும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். இப்படத்தில் சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ச ரி க ம இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் சினிமா பேனரான யொட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ள இநஙத படத்துக்கு தரன் இசையமைத்திருக்கிறார்.