மிகவும் மோசமடைந்த உடல் நிலை! உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்

தொடந்தும் 13 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முருகன் தனது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

images (1)

பொலிஸ் ஆணையாளரின் கோரிக்கையை ஏற்று தனது போராட்டத்தை கை விடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்ட பெற்றுள்ள முருகன் ஜீவசமாதி அடையவதற்கு அனுமதி கோரியிருந்தார்.

இது குறித்து பிரதமர் மோதிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து கடந்த 13ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருந்தது.

இந்நிலையில், வைத்தியர்கள் மற்றும் பொலிஸ் ஆணையாளரின் ஆலோசனையின் பிரகாரம் தன்னுடைய உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாக முருகன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு மூலம் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன், பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.