-
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். உத் யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்
-
மிதுனம்
மிதுனம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
கடகம்
கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.
-
கன்னி
கன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
துலாம்
துலாம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தைரியம் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத் யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
-
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.
-
மகரம்
மகரம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக் கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
கும்பம்
கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதரங்கள் பாசமழை பொழிவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
மீனம்
மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.