பேருந்தில் பயணிக்கும் போது ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலிருந்து பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யவுள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் மேற்படி திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
பேருந்துகளில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது சில பேருந்துகளில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்கு பெண் பொலிஸாரை சேவையில் அமர்த்தவுள்ளோம். இவற்றை தவிர மேலதிக செயற்பாடுகளாக இனிவரும் நாட்களில் விசேட ரோந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பவர்களை மடக்கி பிடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.